பிக்பாஸில் இரண்டாவதாக வெளியாவது இவர்தானாம்!

ஜூலை 08, 2018 863

சென்னை (08 ஜூலை 2018): விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது வாரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) வெளியேற்றுப் படலம் நடைபெறும் நிலையில் ஏற்கான்வே நேற்று மும்தாஜ் காப்பாற்றப் பட்டுவிட்டார். ஆனால் மீதமுள்ள நான்கு பேரான, அனந்த் வைத்திய நாதன், பொன்னம்பலம், நித்யா மற்றும் பாலாஜி ஆகியோரில் ஒருவர் வெளியாக்கப் படுவார்.

பொதுமக்களின் கணிப்பை தொடர்ந்து பொய்யாக்கி வருகிறது பிக்பாஸ். அந்த வகையில் இன்று அனந்த் வைத்தியநாதன் தான் வெளியாக்கப் படுவார் என்பது அனைவரின் கணிப்பு. இரண்டாவதக பொன்னம்பலம் வெளியாக்கப் படலாம் என்ற கணிப்பும் உள்ளது. ஆனால் பிக்பாஸ் பொதுவாக இந்த சீசனில் எதிர்பாராத வகையில்தான் ஆட்களை வெளியாக்கக் கூடும் என பலர் கருதுகின்றனர்.

மிகவும் ஸ்டாங்கான போட்டியாளராக கருதப் பட்ட மமதி சாரி யாரும் எதிர்பாராத வகையில் வெளியானார். ஆனால் அவர வெளியில் வந்து அளிக்கும் நேர்காணல்கள் அவர் உள்ளேயே இருந்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு மக்களிடையே தோன்றுகிறது.

இதற்கிடையே மிகவும் எரிச்சலான இரண்டு போட்டியாளர்கள் நித்யா மற்றும் தாடி பாலாஜி. இவர்கள் பொதுமக்களை நோகடித்தாலும் விஜய் டிவிக்கு வேண்டியவர்களாக தெரிவதால் இவர்கள் இருவரும் அங்கு இருக்கக் கூடும் என்ற பார்வையும் உண்டு. பொதுப் பார்வையில் பாலாஜி வெளியேற்றப் பட வேண்டும் என்பதே மக்களின் எதிர் பார்ப்பு அதை பிக்பாஸ் நிறைவேற்றுவார் என்றே மக்கள் மக்கள் கருதுகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...