பிக்பாஸ் குளறுபடிகள் - நித்யா எப்படி வெளியேற்றப் பட்டார் தெரியுமா?

ஜூலை 16, 2018 1126

சென்னை (16 ஜூலை 2018): பிக்பாஸ் நிகழ்ச்சியில் நித்யா வெளியேற்றப் பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் இரண்டாவது சீசன் நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. சனிக்கிழமை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், பொன்னம்பலம் காப்பாற்றப்படுவதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நடிகை யாஷிகா, நடிகர் பாலாஜி ஆகியோர் மக்களின் வாக்குகள் மூலம் காப்பாற்றப்பட்டுவிட்டதாக அறிவித்த கமல்ஹாசன் நித்யாவை வெளியேற்ற விரும்பி மக்கள் தீர்ப்பளித்துள்ளதாக கூறினார்.

4 பேரில் ஒருவரை வெளியேற்ற ஜூலை 9-ஆம் தேதியன்று விஜய் தொலைக்காட்சி ட்விட்டரில் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியுள்ளது. அதைப் பார்த்தால் நித்யா பிக்பாஸ் நிகழ்ச்சியினரால் வெளியேற்றப்பட்டாரா? என்ற கேள்வி அனைவருக்கும் எழும்.

அந்த ட்விட்டர் வாக்கெடுப்பில் யாரை இந்த வாரம் வெளியேற்ற நினைக்கிறீர்கள்? என கேள்வி கேட்கப்பட்டு அதில் 4 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதில் 27,552 வாக்குகள் பதிவாகியுள்ளன. அதன்படி 61% பேர் யாஷிகாவை வெளியேற்ற வாக்களித்துள்ளனர். மேலும் பொன்னம்பலத்திற்கு 22 % வாக்குகளும், பாலாஜிக்கு 7% வாக்குகளும், நித்யாவிற்கு 10% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

எனினும், நேற்று நித்யா வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியினர் எடுத்த இந்த முடிவு சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இதனால் ரசிகர்களும் குழப்பமடைந்துள்ளனர்.

இதற்கிடையே வாக்கெடுப்பு முறை வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...