பிக் பாஸில் மீண்டும் ஸ்நேகன்!

ஜூலை 17, 2018 718

சென்னை (17 ஜூலை 2018): விஜய் டிவியின் பிக்பாஸ் வீட்டுக்குள் ஸ்நேகன் மீண்டும் நுழைகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்திருக்கும் நிலையில், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 16 போட்டியாளர்களில் மமதி, அனந்த் வைத்தியநாதன், நித்யா என 3 பேர் இதுவரை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளனர். இந்த வாரம் வெளியேறுவோரின் பட்டியலில் பாலாஜி, ஐஸ்வர்யா, ரம்யா ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

கடந்த வாரத்திலிருந்த போலீஸ் - திருடன் டாஸ்க் போன்று இந்த முறை பள்ளி சிறுவர்களாக பிக்பாஸ் பங்கேற்பாளர்கள் மாறியுள்ளனர். இந்நிலையில் ஆசிரியராக பிக்பாஸ் வீட்டிற்குள் கவிஞர் சினேகன் வருகை தந்துள்ளார். இதற்கான புரமோ வீடியோவை பிக்பாஸ் நிகழ்ச்சிக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...