பிக்பாஸ் பிரபலம் மீது போலீசில் புகார்!

ஜூலை 24, 2018 771

பெங்களூரு (24 ஜூலை 2018): பிக்பாஸ் பிரபலம் மாடல் பந்த்கி கல்ரா மீது போலீசில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.

பிக்பாஸில் பங்கேற்றவர் பிரபல மாடல் பந்த்கி கல்ராவை சமூக வலைதலங்களில் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் விளம்பரம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் ரூ.35 ஆயிரத்துக்கு ஐஃபோன் எக்ஸ் ரக போன்களை விற்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது அவரை பின் தொடரும் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த யுவராஜ் சிங் யாதவ் என்பவர், கல்ரா இந்த விளம்பரத்தை ஷேர் செய்திருப்பதால் அதை நம்பினார். தனக்கு இரண்டு ஃபோன்கள் தேவைப்படுவதாக அதில் புக் செய்த யுவராஜ், முன் பணமாக ரூ.13 ஆயிரத்தையும் செலுத்தியுள்ளார். புக் செய்யப்பட்ட சிறிது நேரத்தில் பந்த்கி கல்ரா தனது பக்கத்திலிருந்து அந்த விளம்பரத்தை நீக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த யுவராஜுக்கு அந்த நிறுவனம் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் ஃபோன்கள் உங்களுக்கு கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படியே ஃபோன்கள் யுவராஜுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. மீதத்தொகையான ரூ.48 ஆயிரத்தை கொடுத்து அதை வாங்கிய யுவராஜுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரிடம் கொடுக்கப்பட்ட பார்சலில் ஐபோன் எக்ஸ்ஸின் போலி போன்கள் இரண்டு இருந்தது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக பெங்களூரு மரதஹள்ளி காவல் நிலையத்தில் யுவராஜ் புகார் செய்ததை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இவ்விவகாரத்தில் பந்த்கி கல்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...