பிக்பாஸில் முழு சநதிரமுகியாக மாறும் ஐஸ்வர்யா!

ஜூலை 31, 2018 797

சென்னை (31 ஜூலை 2018): விஜய் டிவி பிக்பாஸ் 2 விறுவிறுப்பை எட்டியுள்ள நிலையில் ஐஸ்வர்யா தத்தாவின் போக்கு மிகவும் விமர்சிக்க தொடங்கியுள்ளது.

அதிலும் தன்னை விட அதிக வயது உடைய பாலாஜிடம் இவர் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து பலர் தொடர்ந்து விமர்சிக்க துவங்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், சென்றாயன் படுத்திருக்கும் பாலாஜியிடம் வந்து எழுந்திருக்குமாறு கூறுகிறார். பாலாஜி ஏன் என கேள்வி எழுப்ப உங்கள் மீது தண்ணீர் ஊற்றுவதாக ஐஸ்வர்யா கூறுவதாக சொல்கிறார். இதற்கு பாலாஜி சரி ஊற்ற சொல்லு என மிகவும் பொறுமையாக கூறுகிறார்

இதைதொடர்ந்து ஐஸ்வர்யா டேனியிடம் பேசும் காட்சி காட்டப்படுகிறது. அதில் அவர் அடமென்ட் என்றால் நாம் டபுள் அடமேன்ட்டாக இருக்க வேண்டும் அது தான் ஃபஸ்ட் ரூல் என கூறுகிறார்.

பின் ஐஸ்வர்யா அனைவர் மத்தியிலும் அமர்ந்து, ரூம் ஸ்ப்ரே மூச்சி புல்லா போடணும்.... என கூறியதற்கு மஹத் 100 சதவீதம் அடி தடி சண்டை வரும் என கூறுகிறார். இதற்கு ஐஸ்வர்யா ஒரு பெரிய குச்சியை கையில் வைத்து கொண்டு அவர் ஸ்பெஷல் கெஸ்ட் இல்லை இந்த வீட்டில் என கூறிகிறார். மேலும் படுத்திருக்கும் பாலாஜியை தொந்தரவு செய்யும் விதத்தில் இரண்டு கரண்டிகளை வைத்து கொண்டு ஒலி எழுப்புகிறார்.

இதனால் ரசிகர்கள் பலர் ஏன் இவ்வளவு மோசமாக நடந்து கொள்கிறார் ஐஸ்வர்யா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...