உங்க டி.ஆர் பி ரேட்டிங்குக்கு இதெல்லாம் தேவையா பிக்பாஸ்?

ஆகஸ்ட் 01, 2018 685

பிக்பாஸ் நிகழ்ச்சி எல்லையை மீறி போய் கொண்டிருப்பதாக நெட்டிசன்கள் சலித்துக் கொள்கின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ராணி, பொதுமக்கள் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. ராணியாக ஐஸ்வர்யாவும், அவருக்கு பாதுகாப்பாளராக டேனியலும் ஆலோசகராக ஜனனியும் இருப்பார்களாம். மற்ற அனைவரும் பொதுமக்கள்

இந்த டாஸ்க்கில் ராணி சர்வாதிகாரம் படைத்தவர் என்பதால் இந்த டாஸ்க்கில் தான் கலந்து கொள்ள முடியாது என்று பாலாஜி கூறிவிட்டார். அதனால் ராணி, அந்த வீட்டின் குப்பைகளை பாலாஜி மீது போட சொல்கிறார். யாரும் போட தயங்குவதால் ராணி ஐஸ்வர்யாவே குப்பையை பாலாஜி மீது போடுகிறார்.

கடந்த வார டாஸ்க்கில் தகுதியே இல்லாத ஷாரிக்கை நடுவராக தேர்வு செய்தது போல், எப்போது சமயம் கிடைக்கும் பாலாஜி, உள்பட ஒருசில பழிவாங்கலாம் என்று காத்து கொண்டிருக்கும் ஐஸ்வர்யாவுக்கு வேண்டுமென்றே சர்வாதிகார பட்டமும், கொடுத்து இந்த டாஸ்க்கை நல்லபடியாக செய்தால் அடுத்த வாரமும் அவரை நாமினேஷன் செய்ய முடியாது என்ற சலுகையையும் கொடுக்கின்றார் பிக்பாஸ்.

இந்த டாஸ்க்கை பயன்படுத்தி ஐஸ்வர்யா, தனக்கு பிடிக்காதவர்களை பழிவாங்கும் போக்கும் விபரீதத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. மொத்ததில் மடத்தனமான ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளதாகவே நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர். மேலும் காமெடியனாக இருந்தாலும் மதிப்பும் மரியாதையுடன் இருந்த பாலாஜி பிக்பாஸ் நிகழ்ச்சியில் அளவுக்கு அதிகமாகவே அசிங்கப் படுத்தப் படுகிறார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...