பிக் பாஸ் டி.ஆர்.பி ரேட்டிங்கிற்காக ஷாரிக் பலிகடா!

ஆகஸ்ட் 05, 2018 1682

சென்னை (05 ஆக 2018): விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ்-2ல் இருந்து சாரிக் ஹசன் வெளியேற்றப்பட்டார்.

ரியாஸ்கான் - உமா தம்பதியின் மூத்த மகன் சாரிக் ஹசனின் நடவடிக்கைகள் கொஞ்சம் அத்துமீறலாக இருக்கிறது என்று மக்கள் வாக்களித்ததன் அடிப்படையில் அவர் இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

கடந்த இரண்டு நாட்களாக சர்வாதிகார ஆட்சி என்ற டாஸ்க் நடைபெற்றது. இதில் இந்த வார வீட்டின் தலைவி ஐஸ்வர்யாதத்தா ராணியாக இருந்தார். இவருக்கு ஆலோசகராக ஜனனி மற்றும் பாதுகாவலராக டேனியல் இருந்தனர். சர்வாதிகாரி என்றதும் பிக்பாஸ் வீட்டில் இருப்போரிடம் இதுவரை தனக்கு இருந்த விரோதம் அனைத்தையும் இந்த டாஸ்க் மூலம் தீர்த்துக்கொண்டார். இதனால் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்துக்கொண்டார். அவர்தான் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்று எல்லோரும் எதிர்ப்பார்த்திருந்தனர். ஆனால், அவர் வெளியேற்றப்படாததற்கான காரணம்..... பிக்பாஸ் -2 ஆரம்பத்தில் இருந்து நிகழ்ச்சிக்கு போதிய வரவேற்பு பெறவில்லை. இதனால் டிஆர்பி ரேட்டிங் குறைந்துகொண்டே போனது. இதனை நிவர்த்தி செய்யத்தான் சர்வாதிகாரி டாஸ்க்கை வைத்தார்கள். அது சரியாக சென்று ரேட்டிங் அதிகமாகிவிட்டதால் ஐஸ்வர்யாதத்தா வெளியேற்றப்படவில்லை.

அவருக்கு பதிலாக ஷாரிக்கை வெளியேற்றி பலிகடா ஆக்கியுள்ளனன் பிக் பாஸ் குழுவினர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...