பிக் பாஸிலிருந்து ஷாரிக் வெளியேற இதுதான் காரணம்!

ஆகஸ்ட் 06, 2018 2845

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகர் ரியாஸ் கான் , உமாரியாஸ் தம்பதிகளின் மகன் ஷாரிக் நேற்று வெளியேற்றப் பட்டார். ஆனால் இதன் பின்னணியில் மக்கள் ஓட்டை விட வேறு ஒரு விவகாரம் இருப்பதாக கூறப் படுகிறது.

48 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 16 போட்டியாளர்கள் பங்கு பெற்றனர். இதில் மமதி, அனந்த் வைத்தியநாதன், ரம்யா, நித்யா ஆகிய 4 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது 12 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இந்த வாரம் வெளியேறுவோரின் பட்டியலில் மஹத், ஷாரிக், பொன்னம்பலம், பாலாஜி, ரித்விகா, மும்தாஜ் ஆகிய 6 பேர் இடம் பெற்றனர். 6 பேரில் ஷாரிக் வெளியேற்றப் பட்டார். கமலுக்கு கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி பொன்னம்பலத்தை காப்பாற்றினார்.

ஷாரிக் வெளியேறுகிறார் என்று அறிவித்ததும் பிக்பாஸ் வீடு முழுவதும் சோகத்தில் மூழ்கியது. ஷாரிக்கை அனைவரும் ஆரத்தழுவிக் கொண்டு அழுதனர். ஷாரிக் போட்டியாளர்கள் அனைவரிடமும் நன்றி கூறி விடைப்பெற்றார். மேலும் போட்டியாளர்கள் அனைவரும் ஷாரிக்குடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

ஆனால் ஷாரிக் வெளியேற்றப் பட்டிருக்கக் கூடாது என்பது மக்களின் பேச்சாக உள்ளது. ஷாரிக்கோடு ஒப்பிடும்போது மஹத் அதிகம் சேட்டை செய்துள்ளார். அவரை வெளியேற்ற வேண்டும் என்று மக்கள் பல நாட்களாக கூறி வருகின்றனர். ஆனால் வாய்ப்பு இல்லாமல் இருந்தது. இம்முறை அவரைத்தான் வெளியேற்றியிருக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர். ஏனென்றால் யாஷிகாவுடன் மஹத் அடித்த லூட்டிகள் அவ்வளவு முகம் சுழிக்க வைத்தவை.

இதற்கிடையே ஷாரிக் - ஐஸ்வர்யா இடையே இருந்த நட்பு ஷாரிக்கின் பெற்றோருக்கு பிடிக்க வில்லை என கூறப் படுகிறது. இது மேலும் வலுப்பெற்றுவிட வாய்ப்பு உள்ளதாகவும், எனவே உமா ரியாசுக்கு விஜய் டிவியில் இருந்த செல்வாக்கை பயன்படுத்தி ஷாரிக்கை ஐஸ்வர்யாவிடம் இருந்து காப்பாற்ற இவர்கள் வேண்டுகோள் விடுத்ததன் அடிப்படையில் ஷாரிக் வெளியேற்றப் பட்டிருக்கக் கூடும் என்ற பேச்சும் நிலவுகிறது.

ஓரளவுக்கு பொதுமக்களுக்கு ஷாரிக்கை அறிமுகப் படுத்தி விட்டதால் இனி சினிமா வாய்ப்புகள் இலகுவாக கிடைக்க வாய்ப்பு உள்ளதால் இந்த முடிவு என்பதாகவும் கூறப் படுகிறது. இதனை கமல் நாசூக்காகவும் தெரியப் படுத்திவிட்டார்.

அதேவேளை ஷாரிக், ஐஸ்வர்யா, மஹத், யாஷிகா ஆகிய நால்வரும் அவர்களது மோசமான நடவடிக்கைகளால் பொதுமக்கள் பார்வையில் அதிக வெறுப்புக்கு ஆளானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- தல தளபதி

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...