ஹலோ கமல் ஹாசன் இதையெல்லாம் நாங்கள் நம்ப தயாரில்லை!

ஆகஸ்ட் 18, 2018 736

சென்னை (18 ஆக 2018): பிக்பாஸ் 2 விலிருந்து போட்டியாளர் ஐஸ்வர்யா வெளியாகுவது போல் ஒரு புரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. ஆனால் அதனை ரசிகர்கள் நம்ப தயாரில்லை என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் முன் மட்டும் போட்டியாளர்கள் அனைவரும் சாந்த சொரூபிகளாக நடிப்பார்கள். ஆனால் திங்கள் முதல் கோரத்தாண்டவம் ஆடுவார்கள். குறிப்பாக ஐஸ்வர்யா மற்றும் மஹத்தி ஆட்டம் கொஞ்சம் ஓவராகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில் சனிக்கிழமை வெளியாகியுள்ள் புரமோ வீடியோவில் கமல் முன்னிலையில் ஐஸ்வர்யா பயங்கர ஆத்திரத்துடன் கத்துகிறார். மகத்திடமும் மும்தாஜிடம் அவர் போடும் சண்டையால் கமல்ஹாசனே அதிர்ந்து ஒரு துர்கா பூஜையே அங்கு நடக்கின்றது என்று கூறுகின்றார்

பின்னர் பிக்பாஸ் வீட்டை விட்டு தான் வெளியேற விரும்புவதாக ஐஸ்வர்யா கூற இப்படி படம் காண்பித்து கொண்டிருக்க கூடாது, ஐந்து நிமிடம் கதவை திறந்து வைக்கின்றேன். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே செல்ல விரும்புபவர்கள் தாராளமாக போகலாம்' என்று கூற உடனே ஐஸ்வர்யா எழுந்து நான் செல்கிறேன் என்று கூறுகிறார்.

ஆனால் புரோமோவில் ஹைப் காட்டிவிட்டு முழுவதும் பார்க்கும் போது மிகுந்த ஏமாற்றம் அடைவதால் இதையும் நாங்கள் நம்ப தயாரில்லை என நெட்டிசன்கள் எழுதி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...