மத துவேஷத்திற்கு இடம் அளிக்கிறதா பிக்பாஸ்?

ஆகஸ்ட் 20, 2018 1896

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மஹத் மற்றும் ஐஸ்வர்யாவின் நடவடிக்கைகள் எல்லை தாண்டிப் போவதை இந்த வாரம் காண முடிந்தது.

வழக்கம் போல் இல்லாமல் சனி ஞாயிறு கமல் வரும் எபிசோட் இந்த வாரம் கொஞ்சம் அதிகமாகவே சூடு பிடித்தது. மும்தாஜ் மீது மகத் , ஐஸ்வர்யா ஆகியோருக்கு இருக்கும் கோபம் அளவுக்கு அதிகமாகி காட்டுக் கத்தல் கத்தினர் இருவரும்.

இதனால் ஒரு சமயத்தில் கமலே அதிருப்தி அடைந்ததை அவரது முகத்தில் காண முடிந்தது. ஆனால் இதையெல்லாம் அமைதியாக பர்த்து புண்சிரிப்புடன் எதிர் கொண்டார் மும்தாஜ். இப்படி இருக்க மும்தாஜுக்கு பெரிதாக ஆதரவும் யாரும் கொடுத்துவிட வில்லை. பொது மக்கள் தரப்பிலிருந்து மட்டும் கைதட்டல் கிடைத்தது.

ஒரு சமயத்தில் மஹத்தின் கோபம் எல்லை தாண்டிப் போய் மும்தாஜின் வயதையும் பொருட் படுத்தாமல் 'அந்த பொம்பள' என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார். அதை கூட பார்வையாளர்கள் பொறுத்துக் கொண்டனர். ஆனால் மும்தாஜ் குர்ஆன் படிப்பதையும், தொழுகை நடத்துவதையும் விமர்சித்ததைத்தான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

இதில் மஹத்துக்கு ஏதோ உள் அர்த்தம் இருப்பதாகவே பார்வையாளர்கள் கருதுகின்றனர். ஐஸ்வர்யாவும் அதனை ஆமோதித்து மும்தாஜை விமர்சித்தார். பொதுவாக இதுபோன்ற காட்சிகளை பிக்பாஸ் எடிட் செய்திருக்க வேண்டும். ஆனால் அதனை வெளியிட்டது மிகப்பெரிய குற்றம். அதே வேளை கமல் அதனை கண்டு கொள்ளாமல் பேய் பிசாசு என திசை மாற்றி விட்டார்.  அவரிடம் இருந்து கண்டிப்பை எதிர் பார்த்த மக்கள் ஏமாந்து போனார்கள்.

அரசியல் பிரவேசத்தில் உள்ள கமல் இதுபோன்ற பேச்சுக்களை வன்மையாக கண்டித்திருக்க வேண்டும் இல்லையேல் கமல் மேலும் பல கண்டனங்களுக்கு உரியவராவார் என்பதே பொதுமக்கள் பார்வை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...