பிக்பாஸ் மஹத்துக்கு எதிராக வெகுண்டெழுந்த அவரது முன்னாள் காதலி பிராச்சி!

ஆகஸ்ட் 22, 2018 747

சென்னை (22 ஆக 2018): பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாஷிகாவுடன் மஹத் காதல் கொண்டுள்ளதால் அவரை வெறுப்பதாகவும் இனி மஹத்துடன் எந்த தொடர்பும் இருக்கப் போவதில்லை என்றும் அவரது முன்னாள் காதலி பிராச்சி அதிரடியாக தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகர் மஹத்துக்கு வெளியில் பிராச்சி என்ற ஒரு காதலி இருப்பதை அனைவருக்கும் தெரியும், அப்படி இருக்க யாஷிகாவை அவர் காதலித்தார். அதனை இருவரும் ஒப்புக் கொண்டனர்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மஹத்தின் நடவடிக்கை அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து அவரது முன்னாள் காதலி பிராச்சி சமூக வலைதளத்தில் பதிந்துள்ள ஒரு பதிவில், ``நான் மனதார காதலித்த மஹத்தை பிக் பாஸ் வீட்டுக்குள் மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தேன். மஹத் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் வரை என்னைக் காதலித்தது உண்மை. ஆனால், இப்போது அப்படியில்லை. அவர் யாஷிகாவை

காதலிப்பதை ஒப்புக்கொண்டுள்ளார். எனவே, நான் மஹத்தை விட்டு விலக முடிவு செய்து விட்டேன். இனி மஹத்துடன் நான் இல்லை. அவரைப் பற்றி என்னிடம் கேட்பதை நிறுத்திக்கொள்ளுங்கள். நான் காயப்பட்டிருக்கிறேன். ஆனால், இது என் வாழ்க்கையை மாற்றிவிடாது. நான் என்னைப் பார்த்துக்கொள்வேன்.

மும்தாஜ் மஹத் மீது அக்கறை காட்டினார். ஜனனி மஹத் மீது உண்மையான நட்பை வெளிப்படுத்தினார். ஆனால், இவர்கள் இருவரையும் மஹத் மதிக்கவில்லை. மஹத் இனி என் வாழ்க்கையில் இல்லை. சமூக வலைதளங்களில் மஹத் குறித்து என்னிடம் யாரும் கேட்காதீர்கள். யாருடைய அனுதாபமும் எனக்கு வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...