பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் நல்லவர்? - ஓவியா பொளேர் பதில்!

ஆகஸ்ட் 24, 2018 748

சென்னை (24 ஆக 2018): பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ஓவியா பதிலளித்துள்ளார்.

கடந்த முறை ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிக கவனம் பெற்றவர் நடிகை ஓவியா. தனது வெளிப்படையான நடவடிக்கைகளால் அதிக ரசிகர் பட்டாளத்தை ஈர்த்த இவருக்கு இணையத்தில் ஆர்மி உருவானது.

தற்போது ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் 2-வில் இந்த வாரத்தில் பிக்பாஸ் வீட்டில் மஹத்தின் நடவடிக்கைகளை பெரும்பாலானோர் விமர்சித்து வருகின்றனர். அதே நேரத்தில் மஹத்தின் நடவடிக்கைகளுக்கு மும்தாஜ் கொடுக்கும் ரியாக்‌ஷன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் குறித்து நடிகை ஓவியாவிடம் ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். அதில் ஒரு ரசிகர் தனது பதிவில், பிக்பாஸ் வீட்டில் உங்களது இடத்தை யாரும் நிரப்பவில்லை. இருப்பினும் மும்தாஜ் நேர்மையாக இருக்கிறார். நீங்கள் தான் லெஜண்ட் என்று ஓவியாவிடம் கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த ஓவியா, நான் பிக்பாஸ் பார்ப்பதே இல்லை. அனைவரும் நல்லவர்கள் தான் என்று கூறினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...