பிக்பாஸ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

ஆகஸ்ட் 25, 2018 835

சென்னை (25 ஆக 2018): பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து மகத் வெளியேற்றப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகத்தை எப்படியாவது வெளியேற்றப் பட வேண்டும் என்று ரசிகர்கள் எதிர் பார்த்தனர். அதற்கு பலன் கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக மகத்தை பகடைக்காயாக பயன்படுத்தி தங்களை காப்பாற்றி கொண்டிருந்த ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவுக்கு இனி திண்டாட்டம். அடுத்த அடிமை யார்? என்பது குறித்து இனி இருவரும் ஆலோசிக்கக்கூடும். அனேகமாக செண்ட்ராயன் சிக்க வாய்ப்பு உள்ளது.

இந்த வார தலைவரான மகத் வெளியேறிவிட்டதால் செண்ட்ராயன் இந்த வார தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மகத்தை வெளியேற்றிய மக்கள் ஐஸ்வர்யாவையும், யாஷிகாவையும் வெளியேற்ற தயாராகி வருகின்றனர். இவர்கள் இருவரும் வெளியேறினால்தான் பிக்பாஸ் நிகழ்ச்சி களைகட்டும் என தெரிகிறது.

மகத் வெளியேற்றப் பட்டதை இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பை நேரில் பார்த்தவர்கள் டுவீட் செய்துள்ளனர். இதனை மகத்தின் நெருங்கிய நண்பர் ஒருவரும் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...