அசிங்கப் பட்ட மஹத் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றம்!

ஆகஸ்ட் 26, 2018 818

சென்னை (26 ஆக 2018): பிக்பாஸ் வீட்டிலிருந்து மஹத் வெளியேறியுள்ளார்.

16 போட்டியாளர்களுடன் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 10 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர். பிக்பாஸ் வீட்டின் நடவடிக்கைகளை வைத்து ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு போட்டியாளரை மக்கள் வாக்களித்து வெளியேற்றி வருகின்றனர். அதன்படி, கடந்த வாரம் வைஷ்ணவி வீட்டைவிட்டு வெளியேறினார்.

இந்த வாரத்துக்கான எலிமினேஷனில் மஹத், மும்தாஜ், சென்ராயன், பாலாஜி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். பட்டியலில் இடம்பெற்றிருக்கும் நால்வரில் ஒருவரான மஹத்தின் நடவடிக்கைகளை பார்வையாளர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். கமல்ஹாசனும் நேற்றைய நிகழ்ச்சியில் மஹத் செய்த தவறுகளை சுட்டிக்காட்டினார். மேலும் இந்த வாரம் கண்டிப்பாக எவிக்‌ஷன் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், மஹத் பிக்பாஸ் வீட்டை விட்டு இன்று வெளியேறியுள்ளார். அதை உணர்த்தும்விதமாக இன்று நிகழ்ச்சிக்குழுவினர் புரமோ வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அதில் வெளியேறப்போகும் நபரின் பெயரை அறிவிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதிலிருந்து மஹத் ரெட் கார்டுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளது தெரியவருகிறது. இதனால் இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிக்கு பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...