பிக்பாஸ் வீட்டில் நடந்த பாலியல் வல்லுறவு!

ஆகஸ்ட் 27, 2018 2166

சென்னை (27 ஆக 2018): விஜய் டிவியின் பிக் பாஸ் வீட்டில் பாலியல் வல்லுறவு நடந்ததாக போட்டியாளர்களில் ஒருவரான டேனி குற்றம் சாட்டியுள்ளார்.

விஜய் டிவியின் பிக்பாஸ் 2வது சீசன் 70 நாட்களை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் போட்டியாளர்களில் மஹத், யாஷிகா, ஆகியோர் நடந்து கொண்ட விதம் பலரையும் முகம் சுழிக்க வைத்தது. அவர்களுக்கு ஐஸ்வர்யா தத்தா உறுதுணையாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் போட்டியை தொகுத்து வழங்கும் நடிகர் கமலிடம் பேசிய டேணி, மஹத் மீது அடுக்கடுகான குற்றச் சாட்டுகளை வைத்தார். அதில் முக்கியமாக பாலியல் வல்லுறவு நடைபெற்றாதாக வைத்த குற்றச் சாட்டு பார்வையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. ஆனால் கமல்ஹாசன் அதனை கண்டுகொள்ளாமல் பேசை திசை திருப்பி விட்டார். மேலும் டேனியை பேச கமல் அனுமதிக்கவும் இல்லை

இதற்கிடையே மஹத் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டார் என்று நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய வைஷ்ணவி குற்றம் சாட்டியுள்ளார்.

மஹத்துக்கு யாஷிகாவுடன் மலர்ந்த காதல், மும்தாஜிடம் அவர் நடந்து கொண்ட விதம் ஆகிய காரணங்கள் அவர் வெளியேற்றப்பட்டதற்கான முக்கியமான காரணங்களாக இருந்தன. மஹத் பிக்பாஸ் வீட்டில் நடந்து கொண்ட விதம் குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய வைஷ்ணவி, தனது ட்விட்டர் பக்கத்தில் மஹத் குறித்த விமர்சனத்திற்கும், கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார். அதில்,”மஹத் என்னிடமும் கடுமையாக நடந்து கொண்டார். இதை நான் வெளியில் வந்த பிறகே உணர்ந்தேன். 32 வயதாகியும் அவர் இன்னும் பக்குவமடையவில்லை என்பதையே அவரது செயல் உணர்த்துகிறது” என்று கூறியுள்ளார்.

மற்றொரு பதிவில், “யாஷிகா உடனான காதலில் மும்தாஜ் தேவையில்லாமல் தலையிட்டதாக மஹத் கருதினார். மேலும் யாஷிகா உடனான உறவை கைவிட்டு விட்டு டாஸ்க்குகளில் கவனம் செலுத்தும்படி அனைவரும் அவருக்கு அறிவுரை கூறினர். இருப்பினும் தனது முரட்டுத்தனமான பிடிவாதத்தால்தான் மஹத் அப்படி செயல்பட்டார்” என்று கூறியுள்ளார்.

பிக்பாஸ் மீது ஏற்கனவே பல்வேறு விமர்சனங்கள் உள்ள நிலையில் பாலியல் வல்லுறவு குற்றச் சாட்டு அந்நிகழ்ச்சி மீது மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...