பிக்பாஸ் மஹத்துக்கு பளார் விட்ட சிம்பு!

ஆகஸ்ட் 28, 2018 973

சென்னை (28 ஆக 2018): பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து மஹத் வெளியேற்றப் பட்டுள்ள நிலையில் அவரை நடிகர் சிம்பு கன்னத்தில் அடிப்பது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக மஹத்தை அனுப்பி வைத்தவர் நடிகர் சிம்பு. ஆனால் அங்கு எல்லோருடனும் சண்டை இட்டு, மிகவும் மோசமாக நடந்து கொண்டார். இதனால் போட்டியாளர்களிடமும், பார்வையாளர்களிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டதோடு, போட்டியிலிருந்தும் வெளியேற்றப் பட்டார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோவில் சிம்பு, மஹத்தை கன்னத்தில் அடிக்கிறார். மஹத் மட்டும் வெளியே வந்தால் அவரை அடிப்பேன் என சிம்பு கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...