பிக்பாஸ் வீட்டில் நடக்கப் போவது இதுதான் - சென்ட்றாயன் மனைவி சொன்ன ரகசியம்!

ஆகஸ்ட் 31, 2018 765

சென்னை (31 ஆக 2018): பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் நடக்கபோகும் சம்பவத்தை சென்ட்றாயன் மனைவி கயல் விழி தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியின் பிக்பாஸ் 2 சீசன் 74 நாடகளை தாண்டி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இந்த வாரம் ஒரே செண்டிமெண்ட் வாரமாக இருந்தது. அதாவது போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்கு வந்து போட்டியாளர்களை மகிழ்வித்தனர்.

இதில் ஹைலைட்டான விசயம் சென்ட்றாயன் மனைவி கர்ப்பமாக இருப்பதும் அதனை அவர் மனைவி பிக்பாஸ் வீட்டில் அறிவித்ததும்தான். இதனால் சென்ட்றாயன் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

இதற்கிடையே அங்கு சென்று வந்த சென்ட்றாயன் மனைவி கயல்விழி, இந்த வாரம் டேனி வெளியாக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த வார எவிக்‌ஷனில் உள்ளவர்கள், ஜனனி, பாலாஜி, மற்றும் டேனி என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...