ஐஸ்வர்யாவை மக்கள் முன்பு நிறுத்துங்கள் - சீறிய ரித்விகா!

செப்டம்பர் 01, 2018 979

சென்னை (01 செப் 2018): பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து காப்பாற்றப் படும் ஐஸ்வர்யாவை மக்கள் ஓட்டுக்கு முன்பு நிறுத்த வேண்டும் என்று ரித்விகா தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியின் பிக்பாஸ் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடிகர் கமல் போட்டியாளர்களிடம் சில கேள்விகள் கேட்டார். அதில் குறிப்பாக போட்டிக்கு தகுதியில்லாதவர்கள் குறித்த கேள்விக்கு நடிகை ரித்விகா ஐஸ்வர்யாவை குறிப்பிட்டு சொன்னார். மேலும் அவர் இதுவரை நாமினேட் ஆகவில்லை என்றும் அவர் தொடர்ந்து அதிர்ஷ்ட வசமாக காப்பாற்றப் படுவதாகவும் தெரிவித்தார்.

ஐஸ்வர்யாவை மக்கள் ஓட்டுக்கு வைத்து அவர் நீடிக்கலாமா? வேண்டாமா? என்பதை மக்கள் தீர்மாணிக்கும் வகையில் மக்கள் முன்பு நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தர்.

ரித்விகா போட்டியாளர்களை வெகுவாக கணித்து வைத்துள்ளது குறிப்பிடத் தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...