டேனியல் வெளியேற்றம் மும்தாஜுக்கு பேரிழப்பு!

செப்டம்பர் 01, 2018 1459

சென்னை (01 செப் 2018): பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து டேனியல் இந்த வாரம் வெளியேற்றப் படுகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் புத்திசாலியான போட்டியாளர் என்றும், டாஸ்குகளை சிறப்பாக செய்யக் கூடியவர் என்றும் பெயர் பெற்றவர் டேனியல், ஆனால் யாஷிகா, ஐஸ்வர்யா கூட்டணியில் சிக்கி பெயரை கெடுத்துக் கொண்டார்.

எனினும் மகத் பிரச்சினையில் திடீரென டேனியலும், மும்தாஜும் நெருக்கமானார்கள். டேனியல் நல்ல பெயருடன் வித்யாசமாக விளையாடினார். ஆனால் விதி யாரைவிட்டது. சாதாரணமாக அவர் எவிக்‌ஷன் லிஸ்ட்டில் வர உடன் ஜனனி, மற்றும் பாலாஜியும் லிஸ்ட்டில் இருக்க இருவருடனான போட்டியில் பின் தங்கியதால் இன்று டேனியல் வெளியேற்றப்படுகிறார்.

மும்தாஜுக்கு உடல் நலக்குறவு ஏற்படும்போது உறுதுணையாக இருந்தவர் டேனியல் எனவே டேனியல் வெளியேறுவது மும்தாஜுக்கு பேரிழப்பாகும்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...