பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியான டேனியல் செய்த முதல் காரியம் இதுதான்!

September 03, 2018

சென்னை (03 செப் 2018): பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியான நடிகர் டேனியல் தனது காதலியை திருமணம் செய்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் மமதி, அனந்த் வைத்தியநாதன், டேனியல், ஷாரிக், நித்யா, பாலாஜி உள்ளிட்ட 16 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.

75 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியிலிருந்து இதுவரை மமதி,அனந்த் வைத்தியநாதன், பொன்னம்பலம், நித்யா, மஹத், டேனியல் உள்ளிட்ட 9 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். வைல்ட் கார்ட் மூலம் நடிகை விஜயலட்சுமி வீட்டுக்குள் சென்றுள்ளார்.

நேற்று நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட நடிகர் டேனியல் தனது காதலியான டெனிஷாவை பதிவுத் திருமணம் செய்துகொண்டார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள டேனியல், ``எனது வாழ்வின் முக்கியமான இந்தத் தருணத்தை சில தனிப்பட்ட பிரச்னைகள் காரணமாக அனைவரிடமும் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. புதுமணத் தம்பதிகளாக வாழ்க்கையை தொடங்கும் எங்களுக்கு உங்கள் அனைவரது வாழ்த்துகளையும் கோருகிறேன். என்று தெரிவித்துள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!