பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர்தான் - வெளியான ரகசியம்!

செப்டம்பர் 06, 2018 1371

சென்னை (06 செப் 2018): பிக்பாஸ் டைட்டில் வின்னராக ரித்விகாதான் தேர்ந்தெடுக்கப் படவுள்ளார் என்கிற ரகசியம் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியின் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் டாஸ்க் ஒவ்வொருவருக்கும் பெரிய சவாலாக அமைந்துள்ளது. அதில் ரித்விகாவுக்கு உடல் ரீதியாக துன்புறுத்தும் வகையில், பிக்பாஸ் 'கண்' லோகோவை டாட்டு போடும் அளவுக்கு டாஸ்க் கொடுக்கப் பட்டது. அது அவர் கையில் நிரந்தரமாக இருக்கும். மற்றவர்களுக்கு காலப் போக்கில் பழைய நிலமைக்கு வந்து விடும்.

இதன் மூலம் பிக்பாஸ் டைட்டில் வெற்றியாளராக ரித்விகா அறிவிக்கப் பட அதிக வாய்ப்பு உள்ளதாக பெரும்பாலானவர்கள் கருதுகின்றார். மேலும் இதன் மூலம் பிக்பாஸின் வின்னர் ரகசியத்தை பொதுமக்களுக்கு ரகசியமாக தெரியப் படுத்தியிருப்பதாகவே உணர முடிகின்றது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...