விஜய் டிவி பிக்பாஸ் வீட்டில் நடந்த மரணம் - பரபரப்பில் பிக்பாஸ் வீடு!

September 08, 2018

சென்னை (08 செப் 2018): விஜய் டிவியின் பிக்பாஸ் வீட்டில் நடந்த நடந்த திடீர் மரணம் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் டிவியின் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் செட்டில் நூற்றுக்கணக்கானோர் இரவும் பகலுமாக அங்கு தங்கி வேலை செய்து வருகின்றனர். இதில் அரியலூர் மாவட்டம் மாத்தூரை சேர்ந்த குணசேகரன்(30), என்பவர் பிக்பாஸ் செட்டில் தங்கி ஏசி மெக்கானிகாக வேலை செய்து வந்துள்ளார்.

நேற்று இரவு இவர் தான் தங்கியுள்ள அறையின் இரண்டாவது மாடிக்கு சென்று சாப்பிட்டு விட்டு கை கழுவ சென்றுள்ளார். அப்போது 2 வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் குணசேகரனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி குணசேகரன் உயிரிழந்தார். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குணசேகரன் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!