பிக்பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி - சென்றாயன் வெளியேற்றம்!

செப்டம்பர் 08, 2018 1376

சென்னை (08 செப் 2018): பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் சென்றாயன் வெளியேற்றப் பட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் ஜனனி ஐயர், சென்றாயன், மும்தாஜ், ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகியோர் இருந்தனர். இவர்களில், ஐஸ்வர்யா வெளியேற்றப்படுவார் என்றே பலரும் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக சென்றாயன் வெளியேற்றப் பட்டுள்ளார்.

மக்களின் கணிப்பு எல்லாம் பொய்யாகி, எதிர்பாராத ட்விஸ்ட் நிகழ்ந்து விட்டதில், மறுபடியும் ஐஸ்வர்யாவைத் திட்டத் தொடங்கி விட்டது அவருக்கு எதிரான ஆர்மி. கடந்த வாரம்தான் சென்றாயனின் திருமண நாள் வந்து போனது. அதற்கு சில தினங்களுக்கு முன் பிக் பாஸ் வீட்டுக்குச் சென்ற இவரது மனைவி கயல்விழிக்கு அங்கு நலுங்கு நிகழ்ச்சியெல்லாம் நடந்தது.

அடுத்து டைட்டிலை வெற்றி பெறுவார் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது ரித்விகாவை. அதற்கும் பிக்பாஸ் ஆப்பு வைத்துவிடுவாரோ என்னவோ.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...