ஹலோ கமல் சார் உங்களுக்கு வெட்கமே இல்லையா?

செப்டம்பர் 09, 2018 1657

சென்னை (09 செப் 2018): நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏகப் பட்ட தில்லுமுல்லு அரங்கேறுவதாக குற்றாச்சாட்டு எழுந்துள்ளது.

பிக்பாஸ் என்ற ரியாலிட்டி ஷோ விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதனை நடிகர் கமல் தொகுத்து வழங்குகிறார். இதில் பங்கேற்கும் நேர்மையான போட்டியாளர்கள் வெளியேற்றப் படுவதாகவும் அதேவேளை பொதுமக்களால் நிராகரிக்கப் படும் போட்டியாளர்கள் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருப்பதும் தொடர் கதையாகி வருகிறது.

அதிலும் குறிப்பாக ஐஸ்வர்யா தத்தா என்ற நடிகை தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார். மேலும் பிக் பாஸ் வீட்டில் பல தொல்லைகளை அரங்கேற்றி வருகிறார். இது பொது மக்களுக்கு நன்றாகவே தெரிகிறது எனினும் அவர் தொடர்ந்து பிக்பாஸ் நடத்துனர்களால் காப்பாற்றப் பட்டு வந்தார். இது பெரும் சர்ச்சை ஆனது.

இதனை அடுத்து இம்முறை பொது மக்கள் ஓட்டுக்காக அவர் அனுப்பப் பட்டார் ஆனால் யாரும் எதிர் பாராத விதமாக ஐஸ்வர்யா காப்பாற்றப் பட்டதோடு, சென்றாயன் என்ற போட்டியாளர் வெளியேற்றப் பட்டுள்ளது பலரையும் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆனால் இது அனைத்தும் தெரிந்த கமல் ஹாசன் அப்பட்டமாக பொதுமக்கள் மீது பழி சுமத்துகிறார். அதாவது யாரும் சரியாக வாக்களிக்கவில்லை என்பதே கமலின் குற்றச் சாட்டு. இது சற்றும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை என்று கருத்து தெரிவித்து வரும் பொது மக்கள் . இவருக்கெல்லாம் ஒரு டிவி நிகழ்ச்சியைக் கூட நேர்மையாக நடத்தத் தெரியாதவர் ஒரு கட்சியை எப்படி வழி நடத்துவார்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...