பிக்பாஸ் வீட்டை விட்டு மும்தாஜ் வெளியேற்றம்?

செப்டம்பர் 15, 2018 852

சென்னை (15 செப் 2018): பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் மும்தாஜ் வெளியேற்றப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிக் பாஸ் 2 தமிழ் வீட்டில் தற்போது ரித்விகா, ஐஸ்வர்யா, மும்தாஜ், ஜனனி, யாஷிகா, விஜயலட்சுமி மற்றும் பாலாஜி என மொத்தம் ஏழு போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் இந்த வாரம் ரித்விகா, ஐஸ்வர்யா, மும்தாஜ் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் எவிக்சனுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் வெளியேற்றப் பட வேண்டும். பெரும்பாலும் ஐஸ்வர்யா தத்தா வெளியேற்றப் பட வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக இருந்து வருகிறது. ஆனால் யாரும் எதிர் பாராத விதமாக மும்தாஜ் வெளியேற்றப் பட்டுள்ளதாக கூறப் படுகிறது. எனினும் இது உறுதி செய்யப் படவில்லை..

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...