பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் போட்டியாக சன் டிவியில் ஒரு நிகழ்ச்சி!

செப்டம்பர் 18, 2018 790

சென்னை (18 செப் 2018): விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் போட்டியாக சன் டிவியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் இரண்டு சீசன்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் கமல் ஹாசன். அந்நிகழ்ச்சி குறித்து பல்வேறு விமர்சனங்கள் உள்ளது ஒரு புறம் மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்த நிலையில் கமல்ஹாசனை அடுத்து விஷாலும் ஒரு நிகழ்ச்சியை சன் டிவியில் நடத்தவுள்ளார். இதுகுறித்த புரமோ இன்று வெளியாகியுள்ளது இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோவில் 'விதைச்சவன் தூங்கலாம், விதைகள் தூங்காது. அன்பை விதைப்போமா? என்ற வசனத்தை விஷால் பேசுகிறார்.

இது பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் போட்டியாக இருக்கக் கூடும் என தெரிகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...