பிக்பாஸ் வெளியேற்றம் திட்டமிட்ட ஒன்றா? - தான் வெளியாகும் வாரத்தை அன்றே சொன்ன நடிகை!

செப்டம்பர் 22, 2018 934

சென்னை (22 செப் 2018): பிக்பாஸ் 2 சீசனில் இன்று யாஷிகா ஆனந்தும், பாலாஜியும் வெளியேற்றப் பட்டுள்ளனர்.

பிக்பாஸ் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஐஸ்வர்யா, ரித்விகா, விஜயலட்சுமி, பாலாஜி, யாஷிகா என ஐந்து பேர் எவிக்‌ஷன் லிஸ்டில் இருந்த ‘பிக் பாஸ்’ சீசன் இரண்டின் கடைசி வார எவிக்‌ஷன் புராசஸ் நிறைவடைந்துவிட்ட நிலையில், யாஷிகா ஆனந்த், பாலாஜி இருவரும் வெளியேற, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, ரித்விகா, ஜனனி ஆகிய நால்வரும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்கள்.

இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறுவார்கள் என்பது ஏற்கெனவே ஷோவில் அறிவிக்கப்பட்டிருந்ததுதான். அந்த இருவர் யார் என பிக்பாஸ் ரசிகர்கள் பரபரப்புடன் காத்திருந்த சூழலில்தான், நேற்றைய எபிசோடில் (21.9.18) ஒரு டாஸ்கில் யாஷிகாவுக்கு ஐந்து லட்சம் பரிசாக வழங்கப்பட்டது, அப்போதே ’பிக் பாஸ் யாஷிகாவை அனுப்ப முடிவெடுத்து விட்டார்’ என்பதை ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது.

பிக் பாஸ் சீசன் இரண்டின் போட்டியாளர்களிலேயே குறைந்த வயதுடையவராக களம் இறங்கிய யாஷிகா ஆனந்த் டாஸ்குகளை மிகவும் அனாயாசமாக செய்து வந்தார். ஆனால் சில தினங்களுக்கு முன்பு தான் அடுத்த வாரம் வெளியேறி விடுவேன் என்று கேமரா முன்பு கூறியிருந்தார். அதனை பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஒளிபரப்பியிருந்தது குற்ப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...