பிக்பாஸ் வீட்டுக்கு போனால் குடிகாரர் திருந்திடுவாராம்!

செப்டம்பர் 23, 2018 853

பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாக இரண்டாவது சீசனின் இறுதிக்கட்டத்தில் உள்ளது.

இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். வாரா வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வந்து அவருக்கு உரிய புரியும்படியும், புரியாமலும் பேசி மக்களை குழப்புவார்.

16 பேர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் மக்களின் வாக்குகளின் படி எலிமினேஷன் நடைபெறும். எனினும் ஐஸ்வர்யா என்ற ஒன்றுக்கும் உதவாத நடிகை இன்று வரை வீட்டில் இருப்பதால் மக்களின் வாக்குகளுக்கு மதிப்பில்லை என்பதான கருத்து நிலவுகிறது. இது ஒரு செட்டப் ரியாலிட்டி ஷோ என்றும். இதில் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் நினைப்பவரே வாரம் வாரம் வெளியேற்றப் படுவார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சொந்த வாழ்க்கையில் பிரிவை சந்தித்த நடிகர் பாலாஜியும் அவரது மனைவி நித்யாவும் இப்போட்டியில் பங்கேற்றது சுவரஸ்யத்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்நிகழ்ச்சிக்காக அவர்கள் இருவரும் ஏற்கனவே பேசி வைத்து பிரிந்திருப்பார்களோ என்ற சந்தேகமும் உண்டு.

இதற்கிடையே குடிப் பழக்கம் அதிகம் உள்ளவரும், கோபம் மிக்கவருமான பாலாஜி 98 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து தன் கோபத்தை கட்டுப் படுத்தியதோடு, குடிப்பழக்கத்தையும் நிறுத்தி விட்டதாக நேற்றைய நிகழ்ச்சியில் கூறினார். மேலும் மனைவியோடு மீண்டும் இணைந்துள்ளதையும் இந்நிகழ்ச்சியில் காட்டினார்கள்.

இதெல்லாம் இருக்கட்டும் பிக்பாஸ் வீட்டுக்கு போட்டியாளராக போனால் குடியை நிறுத்தி விடலாம் என்பதெல்லாம் நம்பும்படியாக உள்ளதா மிஸ்டர் கமல்?

-தல தளபதி

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...