பிக்பாஸ் டைட்டில் வின்னரகிறார் ரித்விகா!

செப்டம்பர் 29, 2018 889

சென்னை (29 செப் 2018): பிக்பாஸ் டைட்டில் வின்னராக ரித்விகா நாளை அறிவிக்கப் படவுள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்குபெற்றனர். ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு போட்டியாளர் அவரின் நடவடிக்கைகளை பொறுத்து வீட்டைவிட்டு வெளியேற்றப்படுவார். அந்த வகையில் 13 போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு தற்போது ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி, ஐஸ்வர்யா ஆகிய 4 பேர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இதற்கான வாக்கெடுப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. அதில் அதிக வாக்குகளைப் பெற்று தொடர்ந்து ரித்விகா முதலிடத்தில் இருந்து வந்தார்.

இரண்டாவது இடத்தில் ஐஸ்வர்யாவும், மூன்றாவது இடத்தில் விஜயலட்சுமியும் , 4- வது இடத்தில் ஜனனியும் இருந்தனர். இந்நிலையில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் ஃபைனல் நாளை இரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெற இருக்கிறது.

இதில் நிகழ்ச்சியின் வெற்றியாளராக ரித்விகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நிகழ்ச்சியில் ஜனனி கூறியது போலவே தமிழ்ப்பெண் ஒருவர் நிகழ்ச்சியின் டைட்டிலை வெல்லப் போகிறார். இந்த முறை ஃபைனலுக்கு தேர்வான 4 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...