பிக்பாஸ் ஐஸ்வர்யா குறித்து அதிர வைக்கும் பின்னணி!

செப்டம்பர் 30, 2018 1351

சென்னை (30 செப் 2018): பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ஐஸ்வர்யா தத்தா குறித்து திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் தெரிந்தவர் யாருக்காவது போன் செய்து பேசலாம் என போட்டியாளர்களுக்கு சொல்லப்பட்டது. அதில் ஐஸ்வர்யா போன் செய்த நபர் பெயர் கோபி.

கோபி சில வருடங்களுக்கு முன் கோடிக்கணக்கில் பொதுமக்களின் பணத்தைச் சுருட்டிய குற்றச்சாட்டில் கைதாகி, புழல் சிறையில் இருந்துவிட்டு வெளியில் வந்தவராம்.

நிதி நிறுவனம் நடத்தி, குறைந்த வட்டிக்குக் கடன் வாங்கித் தருவதாக நூற்றுக்கணக்கானவர்களிடம் பல கோடி ரூபாயைச் சுருட்டியதாகக் கைது செய்யப்பட்டார். அவர் பண மோசடி செய்ய வைத்திருந்த கம்பெனியில் ஐஸ்வர்யாவும் ஒரு பார்ட்னராக இருந்துள்ளார். இந்த தகவலை பண மோசடியால் ஏமாற்றப்பட்ட ஒரு நபர் வெளியிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...