பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் அந்த முக்கிய பிரபலம்?

ஜூன் 21, 2019 711

சென்னை (21 ஜூன் 2019): பிக்பாஸ் மூன்றாவது சீசன் வரும் ஞாயிறன்று விஜய் டிவியில் தொடங்குகிறது.

இரண்டு சீசன்களின் வெற்றியை அடுத்து மூன்றாவது சீசனுக்கு பலத்த எதிர் பார்ப்பு உள்ளது. அது எப்போது ஆரம்பிக்கும் என ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். ஏனெனில் 100 நாட்கள் தினமும் நல்ல பொழுதுப்போக்கு என செம்ம விறுவிறுப்பாக செல்லும்.

அப்படியிருக்க இந்த மூன்றாவது சீசனில் யார் இந்த வீட்டிற்குள் செல்வார்கள் என்பது தான் அனைவரின் எதிர்ப்பார்ப்பும்.

இதில் கலந்து கொள்பவர்கள் குறித்து செய்திகள் கசிந்தாலும் விஜய் டிவி அதனை ரகசியமாகவே வைத்துள்ளது. இந்நிலையில் நடன இயக்குனர் சாண்டி இந்த வீட்டிற்குள் செல்வதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...