பிக்பாஸ் ரேஷ்மாவின் பின்னணியில் இப்படி ஒரு கதையா?

ஜூன் 27, 2019 644

சென்னை (27 ஜூன் 2019): விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் ரேஷ்மா கூறிய அவரது சொந்த கதை பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசன் கடந்த ஞாயிறன்று தொடங்கியது. இதில் நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் சொந்த அனுபவங்களை பேச டாஸ்க் கொடுக்கப் பட்டது.

அதில் பேசிய வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் திரைப்பட புகழ் (ரேஷ்மா) அவரது சொந்த கதையை கூறினார். அதில் அவரது முதல் திருமணம் தோல்வியில் முடிந்ததும், இரண்டாவதாக வீட்டை எதிர்த்து அமெரிக்கரை திருமணம் செய்ததாகவும், அவரும் கொடுமைப் படுத்தியதால் அவரையும் விவாகரத்து செய்ததாக கூறினார். அவர் மூலம் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தபோது வயிற்றில் வலி ஏற்பட்டு தானாகவே மருத்துவமனை சென்று குறை மாதத்தில் குழந்தை பெற்று அந்த குழந்தை இன்குபேட்டர் மூலம் பாதுகாக்கப் பட்டு தற்போது உயிருடன் இருப்பதாகவும், ஆனால் அந்த குழந்தைக்கு ஆட்டிசன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேபோல மூன்றாவதாக 9 மாத கர்ப்பிணியாக இருந்தபோதே அந்த குழந்தை வயிற்றிலேயே இறந்ததாகவும் தெரிவித்து அனைவரையும் கண் கலங்க வைத்தார்.

நடிகைகள் மீது பல விமர்சனங்கள் இருந்தபோதும், அவர்களது சொந்த வாழ்க்கையில் பல சோகங்களும் உள்ளது இதுபோன்ற சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...