விஜய் டிவியின் பிக்பாஸ் வீட்டில் கைதாகும் போட்டியாளர்?

ஜூன் 28, 2019 793

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்களிப்பாளர்களில் ஒருவரை கைது செய்ய போலீஸ் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையலாம் என்று தெரிகிறது.

விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஞாயிறன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சி தொடங்கி இரண்டு நாள் கழித்து பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தவர் நடிகை, மற்றும் மாடல் மீரா மிதுன்.

இவரால் பாதிக்கப் பட்ட சில அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆனால் அவர் தலைமறைவாக இருந்து தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். ஆனால் அவரால் பாதிக்கப் பட்டவர்களில் ஒருவரான ஜோ என்பவர் மீரா மிதுனை பிக்பாஸ் வீட்டில் வைத்து போலீசார் கைது செய்வர் என்று தெரிவித்துள்ளார்.

உண்மையிலேயே மீரா மிதுன் மீது வைக்கும் குற்றச்சாட்டு உண்மையா? அல்லது டி ஆர்பி ரேட்டுக்காக இது போன்ற சர்ச்சைகள் உருவாக்கப் படுகின்றனவா? என்று தெரியவில்லை. 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...