பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கையை பகிர வேண்டும் - நடிகை பரபரப்பு புகார்!

ஜூலை 17, 2019 1311

ஐதராபாத் (17 ஜூலை 2019): பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமெனில் படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று நடிகை பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

பிக்பாஸ்’ நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக தென் இந்திய டி.வி.க்களிலும் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் வரும் 21-ந்தேதி துவங்க உள்ளது. முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆரும், 2-வது சீசனை நானியும் தொகுத்து வழங்கினார்கள். இந்நிலையில் மூன்றாவது சீசனை மூத்த நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்க உள்ளார்.

இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. தெலுங்கில் பிரபல டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளினியான ஸ்வேதா ரெட்டியை பிக்பாஸ்-3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைத்தனர். அப்போது பிக்பாஸ் வாய்ப்புக்காக தன்னை படுக்கைக்கு அழைத்ததாக ஸ்வேதா புகார் தெரிவித்தார்.

ஸ்வேதாவின் புகார் பரபரப்பு அடங்குவதற்கு முன்னதாகவே பிக்பாஸ் மீது போலீசில் புகார் அளித்துள்ளார் நடிகை காயத்திரி குப்தா. இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:- நிகழ்ச்சி தொடங்குவதற்கு இரண்டரை மாதங்களுக்கு முன்பே என்னிடம் ஒப்பந்தம் போட்டார்கள். ஆனால் தற்போது அந்த ஒப்பந்தத்தை அவர்கள் திரும்ப பெற்றுள்ளனர். ஒப்பந்தம் போடப்பட்டதால், நான் வேறு எந்த புதிய வாய்ப்புகளையும் ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் நான் நிறைய வாய்ப்புகளை இழந்துள்ளேன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது சில நாடகங்கள் உருவாக்கப்பட வேண்டும் என அவர்கள் என்னிடம் கூறினார்கள். நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களில் யாருடனாவது ஏற்கனவே கருத்து வேறுபாடு அல்லது பிரச்சினை இருக்கிறதா என்றும் என்னிடம் அவர்கள் கேட்டனர். அவர்களை பொறுத்தவரை நான் யாருடனாவது பிரச்சினை செய்யவில்லை என்றால் டி.ஆர்.பி. கிடைக்காது. எல்லாமே நாடகம் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...