கரூர்: மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கரூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை: கோடைவிடுமுறைக்கு பின்னர் தமிழகத்தில் ஜூன் 1-ஆம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா தெரிவித்துள்ளார்.

திருச்சி: ஊழலற்ற மக்கள் ஆட்சியை தி.மு.க மற்றும் அ.தி.மு.க போன்ற கட்சிகள் ஒரு போதும் கொடுக்காது.  வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என சீமான் அறிவிப்பு செய்துள்ளார்.

சென்னை: 5-வது முறையாக முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட தனக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை: பூரண மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்தக்கோரி வரும் ஜூன் 5-ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் த.மா.கா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றி ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

உத்திர பிரதேசத்தில் மூரி எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது.

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் ஓராண்டு ஆட்சி காலத்தில் மாட்டு இறைச்சி ஏற்றுமதி விகிதம் 15 சதவீதமாக அதிகரித்து உள்ளதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகள் மவுனம் காப்பது ஏன்? என்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான திக் விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பிரமுகர் மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன் சென்னையில் இன்று அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அரசு விளம்பரங்களில் முதல்வர் படம் இருக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...