எச். ராஜாவைத் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்க!

ஜூன் 27, 2015 1820

தமிழகத்தில் மத உணர்வுகளைத் தூண்டும் விதத்திலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகவும் பேசிவரும் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜாவைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொது செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

பள்ளிகளில் பர்தா அணிந்து வருவது பிட் அடிக்க வசதியை ஏற்படுத்தும் எனவும் பர்தா அணிந்து கல்வி நிறுவனங்களுக்கு வர அரசு தடை விதிக்க வேண்டுமெனவும் எச். ராஜா கூறியிருந்தார்.

இது குறித்து நடந்த விவாதத்தில், அவரவர் மத அடையாளங்களுடன் பள்ளிக்கு வருவதைத் தமிழக அரசு அனுமதித்திருக்கும்போது சட்டம் வழங்கும் உரிமைக்கு எதிரான பேச்சு இது எனவும் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுவதாக சீமான்மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும்போது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசும் எச்.ராஜாவையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என ஆளூர் ஷாநவாஸ் பேசினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...