சென்னையைக் கொள்ளை கொண்ட ஈரம் - டிரைலர்!

ஜனவரி 01, 2016 4302

வெள்ள ஈரத்தால் மூழ்கடிக்கப்பட்ட சென்னை மாநகரம், ஜாதி, மத பேதமற்ற மனிதர்களின் ஈர உள்ளங்களால் அதிவேகத்தில் மீட்டெடுக்கப்பட்டது.

யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்காமல் உயர்ந்தவன், தாழ்ந்தவன், பணக்காரன், ஏழை என எந்தப் பாகுபாடும் இன்றி கண்முன் கண்ட உயிர்களுக்காக தலைக்கு மேலே ஓடிய வெள்ளத்திலும் தம் உயிரைத் துச்சமாக எண்ணி களமிறங்கி பணியாற்றியவர்களின் தியாகங்கள் வரலாற்றில் பதியப்பட வேண்டியவை.

எங்கள் உள்ள ஈரத்தின் முன்னிலையில் நிலத்தில் இறங்கிய ஈரம் எதுவுமே இல்லை எனத் தெளிவித்த நல் உள்ளங்களுக்காக "ஈரம்" என்ற தலைப்பிலேயே தமிழ் ஊடகப் பேரவை(Tamil Media Forum) மற்றும் இந்நேரம்.காம்(www.inneram.com) இணைந்து சென்னை வெள்ள நிவாரணப் பணிகள் குறித்த ஆவணப்படம் தயார் செய்துள்ளது. அதன் டிரைலர் இங்கே... முழு ஆவணப்படம் விரைவில்!

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...