குடிகார விஐபிகளுக்கு கோவில்களில் மரியாதை - நடிகர் சிவகுமார் பரபரப்பு பேச்சு!

ஆகஸ்ட் 30, 2019 550

நடிகர் சிவகுமார் மாணவ மாணவிகளிடையே சமீபத்தில் பேசிய பேச்சு ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கோவில்களில் இன்றும் இருக்கும் தீண்டாமை தீட்டு போன்றவைகளால் நான் கோவில்களுக்கு செல்வதில்லை. தஞ்சை பெரிய கோவிலில் சிலைகளை வடிவமைத்து செய்த சிற்பி, அங்கு கும்பாபிஷேகம் முடிந்த பிறகு அந்த சிலையை தொட முடியாது. இது நான் பொய்யாக கூறவில்லை. அந்த சிற்பியின் வம்சாவழியினர் இன்றும் என்னிடம் கூறியுள்ளனர். ஆதாரங்களுடன்தான் நான் பேசுவேன்." என்று தெரிவித்துள்ளார்.

மேலும், " கோடிகளை கொட்டும் திருப்பதியில் விஐபிக்கள் தரிசனம் செய்ய மட்டும் சிறப்பு அனுமதி. ஆனால் அவர்கள் எப்படி அங்கு செல்கிறார்கள் என்பதையும் பார்த்துள்ளேன்." என்று பேசி நடிகர் சிவகுமார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

வீடியோ

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...