காரைக்கால் (14 ஜன 2017): இலங்கை நீதிமன்றம் கடந்த 6-ஆம் தேதி விடுதலை செய்த, தமிழகத்தைச்சேர்ந்த 51 மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு காரைக்கால் தனியார் துறைமுகத்திற்கு வந்தனர்.

காரைக்கால் (13 ஜன 2017): ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையில், சில மாற்றம் செய்யக் கோரி மத்திய கேபினட் செயலரிடம் தேசிய கூட்டு நடவடிக்கைக் குழு முன்வைத்த 26 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, காரைக்காலில் அரசு ஊழியர் சம்மேணத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காரைக்கால் (13 ஜன 2017): காரைக்கால் நெடுங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, கல்வி வழிக்காட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

காரைக்கால் (11 ஜன 2017): குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளை தடுக்க, குடியிருப்பு பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துங்கள் என போலீசார்-பொதுமக்கள் நல்லுறவு கூட்டத்தில், போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

காரைக்கால் (11 ஜன 2017): கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி நடா புயலில் வழித்தவறி, 35 நாட்கள் உண்ண உணவு இன்றி, நடுகடலில் மீன், கருவாட்டை உண்டு தத்தளித்து, இலங்கையில் கரை ஒதுங்கிய அந்தமான் மீனவர்கள் 6 பேரை, இலங்கை அரசு இந்திய கடலோர காவல்படை வசம் ஒப்படைத்ததை தொடர்ந்து, நேற்று காலை 6 மீனவர்களும் காரைக்கால் வந்தனர்.

காரைக்கால் (06 ஜன 2017): காரைக்காலில் மீண்டும் லஞ்சம் பெற்று, போலி சான்றிதழ் வழங்கிய, கிராம நிர்வாக அதிகாரி ஜி.கே.மாறனை, மாவட்ட சார்பு ஆட்சியர் கேசவன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

காரைக்கால் (04 ஜன 2017): புத்தாண்டில் கைகுலுக்கி வாழ்த்து சொல்லுவதில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில், 3 பேர் காயம் அடைந்தனர். அதில் ஒருவருக்கு மண்டை உடைந்து தீவிர சிகிச்சையில் உள்ளார். இது தொடர்பாக, 2 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

காரைக்கால் (02 ஜன 2017): கிராமப்புறங்களில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி, விழிதியூர் கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் இலவச மரகன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

தஞ்சை (02 ஜன 2017): தஞ்சை தென்னக பண்பாட்டுத்துறை-காவேரி அன்னை கலைமன்றம் சார்பில், தஞ்சையில் நடைபெற்ற 3 மாநிலங்களூக்கிடையே நடைபெற்ற நாடக போட்டியில், காரைக்கால் நாடகக்குழு 6 பரிசை பெற்றது சாதனை படைத்துள்ளது.

காரைக்கால் (02 ஜன 2017): நோயாளிகளுக்கு கனிவான உபசரிப்புதான் முக்கியம். பிறகுதான் சிகிச்சை என சுகாதார மாணவிகளுக்கு நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில், மாவட்ட எஸ்.எஸ்.பி சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.

Page 1 of 5