புதுடெல்லி(17 செப் 2017): பாபர் மசூதிக்கு எதிராக வழக்கு தொடுத்தவர்களில் ஒருவரான மஹந்த் பாஸ்கர் தாஸ் (90) உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

புதுடெல்லி(08 ஆகஸ்ட் 2017): அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அருகில் பாபர் மசூதி கட்டுவதற்கு பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஷியா வக்பு போர்டு உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.

லக்னோ(31 மே 2017) : பாபர் மசூதி இடிப்பு வழக்கில், பாஜ தலைவர்கள் அத்வானி, ஜோஷி, மத்திய அமைச்சர் உமாபாரதி உள்ளிட்டோரை கூட்டு சதி குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மறுத்து விட்டது.

லக்னோ(26 மே 2017): பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வரும் 30 ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என்று அத்வானி உள்ளிட்டோருக்கு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லக்னோ(22 மே 2017): பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கு லக்னோ சிபிஐ நீதிமன்றத்தில் இன்று தொடங்குகிறது.

புதுடெல்லி(20 ஏப் 2017): பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, உமாபாரதி உள்ளிட்டவர்களின் குற்றம் நிருபிக்கப்படும் பட்சத்தில் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

புதுடெல்லி(19 ஏப் 2017): பாபர் மசூதி இடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளான அத்வானி உமாபாரதி உள்ளிட்டவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லக்னோ(18 ஏப் 2017): பாபர் மசூதி பிரச்சனையை நீதிமன்றத்திற்கு வெளியே இருதரப்பாரும் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற உச்ச நீத்மன்ற ஆலோசனையை எற்க அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (ஏ.ஐ.எம்.பி.எல்.பி) மறுத்துவிட்டது.

புதுடெல்லி(06 ஏப் 2017): பாபர் மசூதி இடிக்கப்பட்ட சதி செயலில் பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோருக்கு தொடர்புண்டு எனவே இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது.

புதுடெல்லி(23 மார்ச் 2017): பாபர் மசூதி விவகாரத்தை இருதரப்பாரும் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.

Page 1 of 3