சென்னை(24 பிப் 2017): ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க முயற்சித்தேன் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

திருச்சி(23 பிப் 2017): திமுக ஆட்சிக்கு வந்தால் முதல் அறிவிப்பாக ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரனைக்கு உத்தரவிடப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை(10 பிப் 2017): ஜெயலலிதா மரணமடைந்த பின்பே அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாக அப்பல்லோ முன்னாள் மருத்துவர் ராமசீதா அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார்.

ஜெ. ஜெயலலிதா என்ற தனித்த பெண் ஆளுமையின் மரணத்திற்குப் பின்னால் மறைக்கப்பட்ட மிகப் பெரும் மர்மம் உள்ளது என சாதாரணப் பொதுமக்களுக்கே சந்தேகம் எழும்போது, மத்தியில் ஆளும் பாஜகவிலிருந்து தமிழகத்தின் எதிர்க்கட்சி திமுக வரை அதில் எந்தக் கேள்வியுமே கேட்காமல் மவுனம் கடை பிடிப்பதன் மர்மம் என்ன?

சென்னை(08 பிப் 2017): ஜெ.மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளதை ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

சென்னை(08 பிப் 2017): முதல் அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் இன்று காலை சென்னையில் உள்ள தனது அரசு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

சென்னை(07 பிப் 2017): முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போயஸ் கார்டனில் நடந்த வாக்குவாதத்தின் பின்பு, மன அழுத்தத்தால் மயங்கி விழுந்ததால்தான் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார் என்று அதிமுக தலைவர்களில் ஒருவரான பி.ஹெச் பாண்டியன் தெரிவித்தார்.

புதுடெல்லி(07 பிப் 2017): முன்னாள் மத்திய அமைச்சர் இ.அஹமது மரண அறிவிப்பை வேண்டுமென்றே மத்திய அரசு தாமதமாக அறிவித்தது என்று எதிர் கட்சிகள் குற்றம் சாட்டி நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டன.

பட்டுக்கோட்டை(06 பிப் 2017): பட்டுக்கோட்டை அருகே பன்றிக்காய்ச்சலுக்கு ஒருவர் பலியானார். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

சென்னை(04 பிப் 2017): ஜெயலலிதா மரணம் அடைந்தது முதல், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் பதவி விலகியதாக வெளியாகும் செய்தி வரை எல்லாமே மர்மமாக உள்ளது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Page 1 of 5