காரைக்கால் (14 ஜன 2017): இலங்கை நீதிமன்றம் கடந்த 6-ஆம் தேதி விடுதலை செய்த, தமிழகத்தைச்சேர்ந்த 51 மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு காரைக்கால் தனியார் துறைமுகத்திற்கு வந்தனர்.

காரைக்கால் (13 ஜன 2017): ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையில், சில மாற்றம் செய்யக் கோரி மத்திய கேபினட் செயலரிடம் தேசிய கூட்டு நடவடிக்கைக் குழு முன்வைத்த 26 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, காரைக்காலில் அரசு ஊழியர் சம்மேணத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காரைக்கால் (13 ஜன 2017): காரைக்கால் நெடுங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, கல்வி வழிக்காட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

காரைக்கால் (11 ஜன 2017): குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளை தடுக்க, குடியிருப்பு பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துங்கள் என போலீசார்-பொதுமக்கள் நல்லுறவு கூட்டத்தில், போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

காரைக்கால் (11 ஜன 2017): கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி நடா புயலில் வழித்தவறி, 35 நாட்கள் உண்ண உணவு இன்றி, நடுகடலில் மீன், கருவாட்டை உண்டு தத்தளித்து, இலங்கையில் கரை ஒதுங்கிய அந்தமான் மீனவர்கள் 6 பேரை, இலங்கை அரசு இந்திய கடலோர காவல்படை வசம் ஒப்படைத்ததை தொடர்ந்து, நேற்று காலை 6 மீனவர்களும் காரைக்கால் வந்தனர்.

காரைக்கால் (04 ஜன 2017): புத்தாண்டில் கைகுலுக்கி வாழ்த்து சொல்லுவதில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில், 3 பேர் காயம் அடைந்தனர். அதில் ஒருவருக்கு மண்டை உடைந்து தீவிர சிகிச்சையில் உள்ளார். இது தொடர்பாக, 2 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

காரைக்கால் (04 ஜன 2017): பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்று கட்டிமுடிக்கப்பட்டு சில ஆண்டுகளாக திறக்காமல் இருந்த மதகடி மீன்மார்க்கெட்டை, எம்.எல்.ஏ அசனா மறுசீரமைப்பு செய்து நேற்று திறந்து வைத்தார்.

காரைக்கால் (02 ஜன 2017): கிராமப்புறங்களில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி, விழிதியூர் கிராமத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் இலவச மரகன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

தஞ்சை (02 ஜன 2017): தஞ்சை தென்னக பண்பாட்டுத்துறை-காவேரி அன்னை கலைமன்றம் சார்பில், தஞ்சையில் நடைபெற்ற 3 மாநிலங்களூக்கிடையே நடைபெற்ற நாடக போட்டியில், காரைக்கால் நாடகக்குழு 6 பரிசை பெற்றது சாதனை படைத்துள்ளது.

காரைக்கால் (29 டிச 2016): காரைக்காலில் நடைபெற்ற 12-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு, அமைச்சர், எம்.எல்.ஏ-கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், மீனவர்கள் சுனாமி நினைவு இடங்களில் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.

Page 1 of 3