விஜய் நடிக்கும் பிகில் படத்தின் வெறித்தனம் பாடல் - வீடியோ

செப்டம்பர் 01, 2019 740

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "வெறித்தனம்" பாடல் வெளியானது.

இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று விஜய்யின் பிகில். வரும் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் முதல் பாடலான சிங்கப் பெண்ணே பாடல் வெளியாகி அதிரிபுதிரி ஹிட் அடித்துள்ளது. இந்நிலையில் இன்று மாலை 6 மணியளவில் இப்படத்தின் டைட்டில் சாங்கான வெறித்தனம் பாடல் வெளியானது.

பாடல் வீடியோ

இந்தப் பாடலை முதன்முறையாக ஏ ஆர் ரஹ்மான் இசையில் விஜய் பாடியிருக்கின்றார். இந்தப் பாடலின் ப்ரோமோ வீடியோவை பிகில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டவுடனே ஆர்.டியை தெறிக்க விட்டு இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...