அமெரிக்கா: மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், உலக அமைதி துறைகளில் உலகளாவிய சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

அமெரிக்கா : அமெரிக்காவின் மிச்சிகன் பள்ளிவாசலுக்கு வெளியே இஸ்லாமிய எதிர்ப்பு பலகைகளுடன் தனித்து நின்று ஆர்ப்பாட்டம் நடத்திய பெண் ஒருவரை, பர்தா அணிந்து வந்த பெண் கட்டித் தழுவி நட்பு பாராட்டினார். இது அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்து வந்த விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் மரணமடைந்தனர்.

ஜகார்தா(12 அக். 15): விமானங்கள் அடிக்கடி மாயமாகி வரும் நிலையில் தற்போது இந்தோனேசிய ஹெலிகாப்டர் ஒன்று ஐந்து பயணிகளுடன் மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷாங்காய்(11 அக்.15): தென் சீனக் கடல் பகுதியில் சீனா அமைத்துவரும் இரண்டு கலங்கரை விளக்குகள் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன.

வடகொரியா: "அமெரிக்க ஏகாதிபத்தியம் விரும்பும் எத்தகைய போருக்கும் பதிலடி கொடுக்க நம் இராணுவம் தயாராக உள்ளது" என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறியுள்ளார்.

துனீஷியா(11 அக். 15): நாட்டில் மீண்டும் மக்களாட்சியைக் கொண்டு வர பெரும் பங்காற்றியமைக்காக துனீஷிய கூட்டமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

நியூயார்க்(10 அக். 15): அமெரிக்கா வடக்கு அரியானாவிலுள்ள பல்கலைக்கழகத்திலும் மற்றும் டெக்காஸ் பல்கலைக்கழகத்திலும்  மாணவர் விடுதியில் துப்பாக்கி சூடு நடந்தது. இதில் இருவர் பலியாகினர்.

மலேசியா(10 அக். 15): மாற்றுப் பாலினரின் உடைகளை முஸ்லிம் திருநங்கைகள் அணிவதற்கு விதித்த தடையை உறுதி செய்து மலேசிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பெய்ஜிங்: சீனாவில் யூன்டாய் மலையின் மேல் 3500 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!