இத்தாலி : இத்தாலியில் நடைபெற்று வரும் எக்ஸ்போ மிலானோ-2015 கண்காட்சியில் ஐக்கிய அரபு அமீரக சார்பில் பாலைவன மணல்திட்டு போன்று பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது கண்காட்சிக்கு வருவோரை வெகுவாக கவர்ந்துவருகிறது.

நியூசிலாந்து : இந்திய தூதர் ரவி தாப்பரின் மனைவி, தம் வீட்டு சமையல் ஊழியரைத் தாக்கிய விசயத்தில் உடனடியாக இந்திய தூதர் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென நியூசிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.

நியூயார்க் : அமெரிக்கா முழுவதும் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துகொள்ள சட்ட அங்கீகாரம் வழங்கி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கானோ: முகம்மது நபியை இழிவு படுத்திய 9 பேருக்கு மரண தண்டனை வழங்கி நைஜீரிய இஸ்லாமிய நீதிமன்றம் தீப்பளித்துள்ளது.

டொரண்டோ: கனடாவின் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் அந்நாட்டு முஸ்லிம் தலைவர்களை அழைத்து இஃப்தார் விருந்து அளித்தார்.

சான்பிரான்சிஸ்கோ : நாட்டில் சர்வாதிகார ஆட்சிக்கு வாய்ப்பில்லை இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

நியூயார்க் : மின்னஞ்சல் தளத்தில் ஜாம்பவானாக உள்ள ஜி-மெயில், நாம் அனுப்பும் மின்னஞ்சலைத் திரும்பு பெறும் unsend ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தவறுதலாக அனுப்பப்பட்ட மின்னஞ்சலை திரும்ப அழைத்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

டோக்கியோ : ஜப்பானின் கடலோரப் பகுதியில் இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் அப்பகுதியிலுள்ள வீடுகளும் அலுவலக கட்டிடங்களும் குலுங்கியதால் பொது மக்கள் அச்சத்தில் வெளியேறினர்.

காபூல்: ஆப்கான் நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதாக தகலவல்கள் தெரிவிக்கின்றன.

கராச்சி : பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வீசும் அனல்காற்றுக்கு இதுவரை 141 பேர் பலியாகியுள்ளதைத் தொடர்ந்து அங்குள்ள மருத்துவமனைகளில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!