இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நேற்று சம்பவித்த மனிதவெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

கீஜூ: சீனாவில் நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது.

புது டெல்லி: 69 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்தியாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நியூயார்க்: மியான்மர் மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதி யங்கி லீயின் வருகையை மியான்மார் அரசு தடை செய்துள்ளது.

திரிபோலி: லிபியாவில் கடத்தப்பட்ட இந்தியர்களில் இருவர் மீட்கப்பட்டுள்ளனர்.

இலண்டன் : இலண்டனில் தமிழர் முன்னேற்ற கழகம் நடத்தும் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் ஆண்டு விழா  சென்ற சனிக்கிழமை(18-July-2015) மாலை பிளாசட் பெண்கள் பள்ளியில் நடைபெற்றது.

சீனா : வெறும் மூன்றே மணி நேரங்களில் 2 மாடிகள் கொண்ட வீட்டினைக் கட்டி முடித்து சாதனை படைத்துள்ளதுள்ள சீன கட்டுமான நிறுவனம்.

நியூயார்க் : தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிரடியாக குறைந்து வருகிறது. அடுத்து வரும் நாட்களில் மேலும் குறையும் என வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இத்தாலி : இத்தாலியில் நடைபெற்று வரும் எக்ஸ்போ மிலானோ-2015 கண்காட்சியில் ஐக்கிய அரபு அமீரக சார்பில் பாலைவன மணல்திட்டு போன்று பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது கண்காட்சிக்கு வருவோரை வெகுவாக கவர்ந்துவருகிறது.

நியூசிலாந்து : இந்திய தூதர் ரவி தாப்பரின் மனைவி, தம் வீட்டு சமையல் ஊழியரைத் தாக்கிய விசயத்தில் உடனடியாக இந்திய தூதர் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென நியூசிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...