நியூயார்க்(10 அக். 15): அமெரிக்கா வடக்கு அரியானாவிலுள்ள பல்கலைக்கழகத்திலும் மற்றும் டெக்காஸ் பல்கலைக்கழகத்திலும்  மாணவர் விடுதியில் துப்பாக்கி சூடு நடந்தது. இதில் இருவர் பலியாகினர்.

மலேசியா(10 அக். 15): மாற்றுப் பாலினரின் உடைகளை முஸ்லிம் திருநங்கைகள் அணிவதற்கு விதித்த தடையை உறுதி செய்து மலேசிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பெய்ஜிங்: சீனாவில் யூன்டாய் மலையின் மேல் 3500 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா(7 அக். 15): அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் பின்லேடனைச் சுட்டுக்கொன்றதாக கூறப்படும் "நேவி சீல்" அதிரடிப்படை வீரருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா(அக்.7, 15): நாய்குட்டியுடன் தன்னை விளையாட அனுமதிக்கவில்லை என்பதற்காக 11 வயது சிறுவன் அந்நாய்க்குட்டியை வளர்த்து வந்த சிறுமியைத்  துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா(07 அக். 2015): இன்றுடன் உலகம் அழியப்போவதாகவும் இன்றே உலகின் இறுதி நாள் என்றும் ஃபிலடெல்ஃபியாவைச் சேர்ந்த பைபிள் குழு தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளது கலகலப்பை உருவாக்கியுள்ளது.

இஸ்தான்பூல்(06 அக் 2015): துருக்கி வான் எல்லையில் ரஷ்ய விமானம் நுழந்த விவகாரத்தில் ரஷ்யாவுக்கு துருக்கி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நியூயார்க்(06/10/2015): நடுவானில் பறந்துகொண்டிருந்த அமெரிக்க விமானத்தின் விமானி திடீரென இறந்ததைத் தொடர்ந்து சாதுரியமாக செயல்பட்ட துணை விமானியின் செயலால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

டோக்கியோ(5 அக். 2015): மருத்துவத்துறையில் புதிய சிகிச்சைமுறையை கண்டுபிடித்தமைக்காக மூன்று மருத்துவர்களுக்கு கூட்டாக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியா(05/10/2015) : மலேசியாவில் நிலவும் கடுமையான புகைமூட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...