சீனா: சீனாவின் யாங்சே ஆற்றில் 456 பேருடன் மூழ்கிய சுற்றுலாக் கப்பலில் இருந்து இதுவரை 431 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மர் : "முஸ்லிம்களைத் தாய்லாந்து, ஆஸ்திரேலியா, மியான்மர் போன்ற நாடுகள் அகதிகளாக ஏற்றுக்கொள்ளக்கூடாது" என மியான்மரில் செயல்படும் 969 என்ற மத பயங்கரவாத அமைப்பின் தலைவர் விராது மத துவேஷ கருத்துகளைத் தெரிவித்துள்ளது உலக நாடுகளிலிருந்து மியான்மருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

கோலாலம்பூர்: மலேசியாவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சிகாகோ: தவறாக நடத்திய குற்றத்திற்காக முஸ்லிம் பெண்மணியிடம் அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனமான யுனைடட் ஏர்லைன்ஸ் மன்னிப்பு கோரியுள்ளது.

சீனா: சீனவின் சுற்றுலா கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மியன்மாரில் சிறுபான்மை சமூகமாக உள்ள ரோஹிங்யா என்று சொல்லப்படும் பர்மிய முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் பெரும் அவல நிலையாக மாறியுள்ளது. இந்நிலையில் ரோஹிங்யா முஸ்லிம் பெண்களை கடத்தல்காரர்கள் பாலியல் கொடுமை செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஸ்டாக்ஹோம்: ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ஸ்வீடன் ஆதரவு தெரிவித்துள்ளது. ஐந்து நாள் அரசு முறைப் பயணமாக சுவீடன் சென்றுள்ள குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஸ்வீடன் தலை நகர் ஸ்டாக்ஹோமில் அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோப்வென்னுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியபோது இந்த உறுதியை ஸ்வீடன் அரசு அளித்தது.

பெய்ஜீங்: சீனாவில் 458 பயணிகளுடன் சென்ற கப்பல் யாங்சி ஆற்றில் மூழ்கி விபத்துக்குள் சிக்கியது. தெற்கு சீனாவில் புயல் தாக்கியதை அடுத்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

டோக்கியோ: ஜப்பானில் இன்று மாலை சக்தி வாந்ய்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

கோலாலம்பூர்: பர்மாவைச் சேர்ந்த 139 முஸ்லிம்களின் உடல்கள் மலேசியாவில் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...