சவூதி : அமெரிக்காவால் சுட்டுக்கொன்றதாக கூறும் பின்லேடனின் இறப்பு சான்றிதழைக் கேட்டு அவரது மகன் அமெரிக்க வெளியுறவு துறைக்குக் கடிதம் எழுதிய தகவல் வெளியாகியுள்ளது.

சுவிஸ் : சுவிட்சர்லாந்து வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை இந்தியப் பெருமுதலைகள் பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு மாற்றி வருவதாக சுவிஸ் அரசு வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கிறது.

கராச்சி : இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தையொட்டி 113 இந்திய மீனவர்களைப் பாகிஸ்தான் அரசு கருணை விடுதலை செய்துள்ளது.

நியூயார்க் : அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கான சார்லஸ்டன் சர்ச்சில் வெள்ளைநிற வாலிபர் பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பரிதாபமாக பலியாகினர்.

கோலாலம்பூர்: மலேசியாவிற்கு சொந்தமான எண்ணை கப்பல் திடீரென நடுக் கடலில் மாயமாகியுள்ளது.

ஜார்ஜியா : கடுமையான மழையினைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மிருக காட்சி சாலையிலிருந்து சிங்கம், புலி முதலான வன விலங்குகள் நகருக்குள் புகுந்ததால் பொது மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

கோலாலம்பூர்: 6,000 டன் பெட்ரோலுடன் மலேசிய சரக்கு கப்பல் ஒன்று  மாயமாய் மறைந்ததாக மலேசிய கடல்துறை அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது. மலாக்காவிலிருந்து குவாந்தானுக்கு சென்றுகொண்டிருந்த அக்கப்பலை வியாழக்கிழமை முதல் காணவில்லை என்றும் அந்தக் கப்பலில் 22 ஊழியர்கள் இருந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.

வாஷிங்டன் : ஐஃபோன் கொடுக்காத காரணத்தால் 23 வயதான ஹைதராபாத் மாணவர் ஒருவர் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டு இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயின் : வரி ஏய்ப்பு விவகாரத்தில் சிக்கிய ஸ்பெயின் நாட்டு இளவரசி கிறிஸ்டினா தனது இளவரசி பட்டத்தை இழந்தார். இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஹராரே: ஒரு அமெரிக்கா டாலரின் மதிப்பு ஜிம்பாப்வே நாட்டில் 350 கோடி கோடி ஜிம்பாப்வே கரன்ஸி(35000000000000000) என மதிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...