கோலாலம்பூர்: 6,000 டன் பெட்ரோலுடன் மலேசிய சரக்கு கப்பல் ஒன்று  மாயமாய் மறைந்ததாக மலேசிய கடல்துறை அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது. மலாக்காவிலிருந்து குவாந்தானுக்கு சென்றுகொண்டிருந்த அக்கப்பலை வியாழக்கிழமை முதல் காணவில்லை என்றும் அந்தக் கப்பலில் 22 ஊழியர்கள் இருந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.

வாஷிங்டன் : ஐஃபோன் கொடுக்காத காரணத்தால் 23 வயதான ஹைதராபாத் மாணவர் ஒருவர் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டு இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயின் : வரி ஏய்ப்பு விவகாரத்தில் சிக்கிய ஸ்பெயின் நாட்டு இளவரசி கிறிஸ்டினா தனது இளவரசி பட்டத்தை இழந்தார். இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஹராரே: ஒரு அமெரிக்கா டாலரின் மதிப்பு ஜிம்பாப்வே நாட்டில் 350 கோடி கோடி ஜிம்பாப்வே கரன்ஸி(35000000000000000) என மதிப்பிடப்பட்டுள்ளது.

சான் பிரான்சிஸ்கோ : டுவிட்டர் இணையதளத்தின் தலைமை செயல் அதிகாரி டிக் கோஸ்டோலோ தனது பணியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ள்தைத் தொடர்ந்து புதிய தலைமை செயல் அதிகாரி தேர்வு செய்யப்படவுள்ளார்.

பெய்ஜிங் : ஊழல் குற்றச்சாட்டு மற்றும் அதிகாரத்தைத் துஷ்பிரயோகமாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் சீனாவின் மூத்த கம்யூனிஸ்ட் தலைவரும் முன்னாள் பாதுகாப்பு அதிகாரியுமான ஜூ யோங்காங்க்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிட்னி : ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டி பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாஷிங்டன் : அமெரிக்க வெள்ளை மாளிகையில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து உடனடியாக பத்திரிகையாளர் சந்திப்பு நிறுத்தப்பட்டு செய்தியாளர்கள் வெளியேற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ரோம் : இத்தாலி தலைநகர் ரோமில் லிஃப்டுக்குள் சிக்கிக் கொண்ட 2 கன்னியாஸ்திரிகள் 3 நாட்கள் கழித்து மீட்கப்பட்டுள்ளனர்.

ஸ்பெயின் : சூரியனில் இருக்கும் தமது மனைகளை விற்பனை செய்ய மறுக்கும் ஈ பே ஆன்லைன் நிறுவனத்தின்மீது ஸ்பெயின் நாட்டு பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...